Saturday, August 27, 2011

என் நெஞ்சே ..! வா இங்கே ..!
நீயின்றி உயிரேதிங்கே..?

பார்வை ஒன்று போதும்
எந்தன் ஜீவன் வாழும்.!

உனை சேரும் நாளும் வாராமல்
வாழும் வாழ்க்கை வீணாகும்.!

ஒரு முறை நினைத்ததை
மறந்திட மனதுக்கு
தெரியுமா ? முடியுமா ?
மறுமுறை பிறந்திட
உனை வந்து சேர்ந்திட
எனக்கிங்கு ஆகுமா.?

பிரிவொன்று நிகழ்ந்தபின்
இதயமும் உனக்கென
துடிப்பதை நிறுத்துமா.?
உறவென்று உயிரென்று
நீயிங்கு ஆனபின்
வேறொன்றை மனம் விரும்புமா.?

சாகும் போதேனும் உன் மார்பில்
சாய வேண்டும் வா.. வா..!
வாழும் போது நான் கேட்ட
காதல் அன்றேனும் தா..தா.!

உன்னை வந்து சேராமல்
வாழ்க்கை இங்கு வீண்தானே .!

எனை விட்டு விடை பெற
காதலை மறந்திட
உனக்கிங்கு முடிந்ததேன்.?
உனை விட எனக்கிந்த
உலகமும் பெரிதல்ல
என்பதை மறந்ததேன்.?

பகலென்றும் இரவென்றும்
பாவமென்றும் காதல் என்றும்
பார்ப்பதே இல்லையே .!
பழகிய நினைவுகள்
எனை தினம் இரவினில்
உறங்கவே விடுவதில்லையே.!

தேகம் வேறாகி போனாலும்
ஜீவன் இங்கொன்றுதானே!.!
ஜென்மம் நூறாகி போனாலும்
வாழ்க்கை உன்னோடு தானே..!

நீயும் இங்கு இல்லாத
நாளும் வாழ்வும் வீண் தானே.!


No comments:

Post a Comment