Thursday, October 6, 2011

மணலா..? மழையா..?
எதுவெனக்கேட்டேன்
மணலென்றால் பிரிவாய்.
மழையென்றால் நனைவாய்..
மணலா..? மழையா..?
எதுவெனக்கேட்டேன்.
மணல் அள்ளி கையில் தந்தாய்
மழையை என் கண்ணில் வைத்தாய்.
புலர்வதால் மலர்வது
பூவுக்கு நிகழ்வது..
நீ பிரிவதால் உலர்வது என்
நெஞ்சுக்கு நிகழ்வது..
நிலவில்லா மேகத்தை
யாரிங்கு ரசிப்பது..?
நீயில்லா தேகத்தை
யாரிங்கு நேசிப்பது..?
மண்ணோடு சேரவே
மழை இங்கு உள்ளது..
உன்னோடு வாழவே
உயிர் இங்கு உள்ளது..
கடல் கொண்ட துளியினை
எங்கே போய் காண்பது..?
என் கண் கொண்ட துளியினை
நீ எப்போது அறிவது..?
உண்ணாமல் வாழ்கிறேன்
உன்னாலே தேய்கிறேன்..
என் கவிதை படித்த வாயினில்
போ என்று சொல்கிறாய்..
தீ வைத்த பாயினில்
எனை தூங்க சொல்கிறாய்..
இன்னும் ஏன் சோதனை..
வாழ்வே முழு வேதனை..





No comments:

Post a Comment