மின்னலை பார்த்தால் பார்வை பறிபோகுமென யார் சொன்னது ..? இதயமல்லவா பறிபோனது உன்னை பார்த்ததும்..
யாரையாவது காதலிக்கிறாயா
என நண்பர்கள் கேட்டபோது
உன் பெயர் சொல்லாமல்
இல்லையென்று
நான் பொய் சொன்னதற்காய்
கோபம் கொள்கிறாய்..
நீயே சொல்
ஒரு குழந்தையை காதலிப்பதை
யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்?
உலகம் தன்னை தானே
சுற்றிகொண்டிருக்கிறது..
ஒருவேளை
அது உன்னை பார்த்திருந்தால்
உன்னை தானே சுற்றி கொண்டிருக்கும்.
வானவில் எப்படி இருக்கும் ? எதிர் வீட்டு குழந்தை கேட்ட போது சட்டென்று காட்டினேன்.. உன் புகைப்படத்தை
Monday, August 30, 2010
காதல் பெருமழையில் தொட்டங்குச்சிக் குடை நீட்டுகிறாய்... பார்வையால் நெருப்பை மூட்டி பனித்துளி வார்த்தைகளை காதுக்குள் ஊற்றுகிறாய்.. தேகத்தை தெருவில் விட்டு உயிரை மேகத்தில் மிதக்க விடுகிறாய்.. என்னை வரசொல்லிவிட்டு நீ வரமறுக்கிறாய். என்னிடம் சொல்லாமலே எனக்காய் காத்திருக்கிறாய்.. அருகிலிருக்கும்போதேல்லாம் எதுவும் பேசாமல் கிளம்பிசெல்லுகையில் குழப்பிவிட்டு போகிறாய்.. இன்னும் கூட உணர முடியவில்லை.. உன்னையும் காதலையும்.
Saturday, August 28, 2010
எங்கேனும் குழந்தைகளை
பார்த்துவிட்டால் நீயும்
குழந்தையாகிவிடுகிறாய்
அவர்கள் வளர்ந்த பின்பும் கூட..
பின்னால் வந்து நின்று கண்களை பொத்தினாய் இன்னுமா நம்புகிறாய்.? என் கண்களுக்கு மட்டும்தான் உன்னை அடையாளம் தெரியுமென்று..