Thursday, March 19, 2009

அன்று
உன்னை கண்டதும்
சிகரட் புகையை மறைத்தேன்
இன்று
உன்னை பிரிந்ததும்
சிகரட் புகைக்குள் மறைந்தேன் .

கோவிலுக்குள் சாமியோடு
நீண்ட நேரம் பேசுகிறாய்
வெளியே காத்திருந்து
காதல் சொன்னால்
சாமியாடி போகிறாய்.

"உன்னை பார்த்தவுடன்
காதலிக்க நானென்ன லூசா ?"
எனக் கேட்டாய்
உன்னை பார்த்த பின்னும்
காதலிக்காமல் இருக்க
நானென்ன லூசா ?.

காதல் வேண்டி உன் பின்னால்
அலை அலை என அலைந்தேன்
கை விரித்து இல்லை என்றாய்
சோகக் கடலில்
அலை அலையாய் அலைந்தேன் .

இப்படி
நேற்று நடந்தது போல் இருந்தது எல்லாம்
இனியும் நடக்குமா
நேற்று நடந்தது போல் எல்லாம்.

"உன்னை காதலிக்கிறேன் "
நான் சொன்னதும் உன்
பொறுமை கலைந்தது
நீ சொன்னதும் என்
கனவு கலைந்தது

நீரற்ற வாழ்க்கை கூட
ஏழு நாள் சாத்தியம்
நீயற்ற வாழ்க்கை
எதடி சாத்தியம்

Tuesday, March 10, 2009

தொடங்கும் இடமும் நீ
அடையும் முடிவும் நீ
காணும் உருவம் நீ
தேடும் கனவு நீ
நான் தேடி அலையும்
தெய்வம் நீ.
கிடைத்த உறவும் நீ
அடுத்த பிறப்பும் நீ
வாழும் உலகம் நீ
வாழ்ந்த இடமும் நீ
என் வாழ்வை வளர்த்த
தாயும் நீ.
வழிந்த கண்ணீர் நீ
அழிந்த முகவரி நீ
வானம் பூமி நீ
அதில் விழுந்த மழையும் நீ
நான் எழுதி தொலைத்த
கவிதை நீ
எனது தாகம் நீ
எனது மேகம் நீ
கடந்த காலம் நீ
கடக்கும் காலம் நீ
என்னை கொன்று சென்ற பிரிவும் நீ.
இருட்டின் வெளிச்சம் நீ
நினைவின் பிதுக்கம் நீ
மேக சேர்க்கை நீ
பூமிப் பிளவும் நீ
உயிர்ப்பிக்கும் அமுதம் நீ
உணர்பிக்கும் காற்றும் நீ
நான் சுமந்து திரியும்
உயிரும் நீ .
கண்மூடித் தவமாய் வாழ்வதும் வீண்
கண்மூடித் தனமாய் வாகவும் வீண்
தினசரி வாழ்வை ரசித்து வாழ்வதே மேல்.
முடிந்தவரை
எல்லோரையும் நேசி
எச்சில் தெறிக்க பேசு
நடுரோட்டில் நண்பர்களோடு அடித்து விளையாடு
உன் அழுகையை நீயே ரசி
சத்தம் போட்டு சிரி
பிடித்த பொருள் குப்பையில் கிடந்தாலும்
ஓடிப்போய் எடு
பலகாரம் வைத்து தந்த எண்ணை
படிந்த துண்டு காகிதத்தை வரி விடாமல் படி
வாயிலிருந்து
கீழே விழுந்த பொருளை துடைத்து
மீண்டும் வாயில் போடு.
பசித்தால் உரிமையோடு கேள்
பார்த்தும் பார்க்காமல் போன நண்பனை
நிறுத்தி கெட்ட வார்த்தையால் திட்டு -பின்
பகையை மறந்து கட்டிப்பிடி.
காதலிக்காக காத்திரு
காதலுக்காக காத்திருக்காதே
பிடித்த பாடல்எங்காவது கேட்டால்
அது பாடி முடியம் வரை நின்று கேள்.
உன்னை நீயே பாராட்டு
முடிந்தால் உண்மை பேசு
முடியாவிட்டால்
யோசிக்காமல் பொய்யை பேசு.
குழந்தை வயது சேட்டைகளை மீண்டும் செய்.
எப்போதும் யதார்த்தமாய் இரு .
எதற்கும் தயக்கம் காட்டாதே .
இருக்கும் வரை தான் வாழ்க்கை
இறக்கும் வரைதான் வாழ்க்கை.

சத்தம் இல்லை
மௌனம் மட்டும்
சில விசாரிப்புகள்
நீ என்னையும் நான் உனையும்
பிறகெல்லாம் மௌனம் மௌனம் மட்டுமே
மறந்தும் கூட பழையதான காதல்
வார்த்தையை புதுப்பிக்கவேஇல்லை
நானும் அதை நினைவு படுத்தவும் இல்லை
நீ உனக்குள்ளும் நான் எனக்குள்ளும்
பேசி கொண்டிருக்கையில்
நேரம் போனது தெரியவில்லை
பிரிந்து செல்கையில்
உன் மௌன சிரிப்பின்
ஓசை கூட என்னுள் புரியவில்லை
எழுந்து நடந்தோம்
நம் பாத சுவடுகளின் ஓசைகள் கூட எதோ
பேசிக் கொண்டது
நாம் மட்டும் மௌனமாய்
இறுதி வரை உன் காதல் மௌனம் கலையவேயில்லை
நீ சென்று விட்டாய்
நீ சென்ற திசையில்
தவறி விழுந்த என் கண்ணீர் துளிகளை
நிச்சயம் நீ பார்க்கவில்லை
பார்த்திருந்தால் ஒருவேளை
அது உன்னால்
பத்திரபடுத்தபட்டிருக்கும் .
இரவு பகலை உன் விடியலாக்கி
எனது உலகம் இயக்கினாய் இனி
காற்றுகென்ன செய்வாயென்று கேட்டேன் .
எனது மூச்சே உனது சுவாசம்
கவிதையாய் நீ சொன்னதும்
கண்கள் மூடி உன்னை நானும் சுவாசித்தேன் .
பறவையாய் நீ மாறும் போதுஎனை உன்
வானம் ஆக்குகிறாய்
சிறகை உன் விரல் தீண்டும்போது
விண்மீனாய் சுருங்கவைத்தாய்
ஒரு நத்தை கூடென எனை மாற்றி போனதேன்
அதில் கடலை ஊற்றி நீ புது வித்தை செய்ததேன்
நேற்று வரைக்கும் எனது விடியல்
உனது சிரிப்பில் விடிந்தது
அதை பார்த்து பார்த்து
பூமி கூட பூக்கும் .
இதழ்கள் மூடி இமைகள் திறந்து
கண்களால் நீ பேசினாய்
கேட்க நினைத்த அன்பையெல்லாம்
கேட்காமலே நீ தந்தாய்

காதலா மாயாமா இல்லை
தேவதை சாபமா
பிரிந்ததால் புரிந்ததா இல்லை
புரியாமலே பிரிந்ததா .

Monday, March 9, 2009

விடிந்தும் இரவை விரட்டாதவன்
விழித்தும் விழியை திறக்காதவன்
இமைகள் எதற்கென புரியாதவன்
இதுவரை வெளிச்சம் புணராதவன் .
கருப்பு வெள்ளைக் கனவுகளில்
கடவுள் மட்டும் வருவதில்லை
காலங்கடந்து போனாலும் இவன்
தியானம் என்றும் கலைவதில்லை .
கண்கள் மூடி நடந்து கொண்டே
மோனத் தவம் செய்கின்றான்
கைகள் நீட்டி காற்றிலேறி
ஏகாந்தப் பயணம் போகின்றான் .
தோள் மீது கை வைத்து வரிசையில்
செல்லும் இவனும் எறும்பும் ஒரு ஜாதி
கண்ணை பறித்து தன் கண்ணில் வைக்க
யாரேனும் உண்டா எனத் தேடிச்செல்லும்
இவனும் சிவனும் சரி பாதி .
கனத்த இருட்டின் கால்கள் பிடித்து
விடியல் வேண்டி கெஞ்சுகிறான்
தன்னை நோக்கிகண்கள் திருப்பி
தனக்குள் தானே கொஞ்சுகிறான் .
தன் கண்ணை கட்டி விளையாடும்
விதியைத் தேடி அலைமோதும்
இவன்
தேடும் உலகம் இங்கில்லை
உலகைத் தாண்டிப் போய்
தேடவும் சிறகில்லை .
இவன்
வைக்க படாத புள்ளிகளிடையே
வரையப்பட்ட ஒரு கோலம் .


Sunday, March 8, 2009

தாயின் பால்
குழந்தையாய் இருந்த
என்னை வளர்த்தது
உன் பாசம் வளர்ந்த
என்னை குழந்தை ஆக்கியது.

Tuesday, January 27, 2009

கூடு கட்டும் பறவைக்கெல்லாம்
மரத்தின் ஆசை புரிவதில்லை
ஊதி ஊதிப் பார்த்த போதும்
பனிப் புகைகள் எரிவதில்லை
தன் மேல் விழுந்த நிலவின் பிம்பம்
தண்ணீருக்குத் தெரிவதில்லை
வெந்நீர் ஊற்றி செடிகள் வளர்ந்தால்
பூக்கும் பூக்கள் சுடுவதில்லை
ஒரு பயணத்தை தொடங்கிட இருந்தேன்
என் பாதைகள் யாவையும்
மாற்றி வைத்தாய்.
வழித் துணையென உன்னுடன் வந்தேன்
நீயோ என் விழிகளை பறித்தாய்.
உன்னோடு பேசிய நாட்கள்
வெறும் கண்ணீரில் கரைவதில்லை
நினைவுகள் மங்கிய போதும்
மனம் கண்ணாடி அணிவதில்லை.

மழை நின்ற மாலை நேரம்
மனம் அங்கு உன்னை தேடும்
உயிர் கொண்டு வாராயோ
வானவில்லே.
உனை காண பின்னே வந்தேன்
குரல் கேட்க தள்ளி நின்றேன்
உனை நீங்கி போவேனா
உன் நிழல் நான்.
உடையாமல் உலாவும் நீயென்
நுரைப் பூவடி
விடியாமல் தவிக்கும் என்னை
கரை சேரடி.
உன் விழி பார்த்து விழாமல் போக
வழி சொல்லடி
எது வரை என் உலகம் ?
பிறக்கும் வரை தாய் - இனி
இறக்கும் வரை நீ.

Tuesday, January 20, 2009

என் சுகங்கள்
சுகமாக
தூங்கிவிட்டன
நான் உன்னை
இழந்த பிறகு .

Saturday, January 10, 2009

யாருமற்ற தேசமொன்றை
தோன்ற செய்கிறாய் .
அதில் நானும் நீயும்
சேர்ந்து வாழ கூடமைக்கிறாய்.
காணுகின்ற காட்சியெல்லாம்
வண்ணமாக்கினாய்
உன் வளையல் கொண்டு ஜன்னல் செய்து
வானம் காட்டினாய்
சின்ன சின்ன மேகங்களுக்குள்
ஆசை புதைக்கிறாய்
அதை என்னை காணும் போது
என் மேல் பொழிய விடுகிறாய்
விடியலற்ற பூமியோன்றில்
வாழ்ந்திருந்தவன் உன்
விடிந்து விட்ட வானம்
கண்டு பரவயாகிறேன்
பாலைவனம் வாழ்வதற்கு
பழகிவிட்ட நான் உன்
பார்வை பட்டு
வாழ்வதற்காய்
காத்திருக்கிறேன்.
சிநேகம் கொண்டு எனதுயிரை
உருகவைக்கிறாய் அதில்
உனது வாழ்வை தினமும்
மெல்ல கரைய விடுகிறாய்.







Wednesday, January 7, 2009

தன் மேல் விழுந்த
மழை துளியை
சொந்தம் என்று சொல்ல வந்த
இலை சொல்வதுற்குள்
வெயில் வந்து உறிஞ்சியது
மழை துளியை .