Monday, August 30, 2010



காதல் பெருமழையில்
தொட்டங்குச்சிக் குடை
நீட்டுகிறாய்...
பார்வையால் நெருப்பை மூட்டி
பனித்துளி வார்த்தைகளை
காதுக்குள் ஊற்றுகிறாய்..
தேகத்தை தெருவில் விட்டு
உயிரை மேகத்தில்
மிதக்க விடுகிறாய்..
என்னை வரசொல்லிவிட்டு
நீ வரமறுக்கிறாய்.
என்னிடம் சொல்லாமலே
எனக்காய் காத்திருக்கிறாய்..
அருகிலிருக்கும்போதேல்லாம்
எதுவும் பேசாமல் கிளம்பிசெல்லுகையில்
குழப்பிவிட்டு போகிறாய்..
இன்னும் கூட உணர முடியவில்லை..
உன்னையும் காதலையும்.

Saturday, August 28, 2010


எங்கேனும் குழந்தைகளை
பார்த்துவிட்டால் நீயும்
குழந்தையாகிவிடுகிறாய்
அவர்கள் வளர்ந்த பின்பும் கூட..


பின்னால்
வந்து நின்று
கண்களை பொத்தினாய்
இன்னுமா நம்புகிறாய்.?
என் கண்களுக்கு மட்டும்தான்
உன்னை அடையாளம் தெரியுமென்று..

செடிக்கு தண்ணீர் ஊற்ற
நீ மாடிப்படி ஏறினாய்
மூச்சு வாங்கியது
காற்றுக்கு..
நான்
பிறக்கும்போது
நீயென் அருகிலில்லை..
அதனாலென்ன..
நீயென் அருகிலிருக்கும்போதெல்லாம்
புதிதாய்
பிறக்கிறேனே..

Friday, August 27, 2010


எப்போதும் வாசலோடு
நிறுத்தி விடுகிறாயாம்
புலம்புகிறது
நீ போட்ட கோலம்..

எனக்காய் துடிப்பதை விட
உனக்காய் துடிப்பதற்கே
நேரம் சரியாய் இருக்கிறது
என் இதயத்திற்கு ..

மேகம் அழுகிறது
உன்னை காட்டாமலேயே
செல்கிறதாம்
உன் குடை ..