யாருமற்ற தேசமொன்றை
தோன்ற செய்கிறாய் .
அதில் நானும் நீயும்
சேர்ந்து வாழ கூடமைக்கிறாய்.
காணுகின்ற காட்சியெல்லாம்
வண்ணமாக்கினாய்
உன் வளையல் கொண்டு ஜன்னல் செய்து
வானம் காட்டினாய்
சின்ன சின்ன மேகங்களுக்குள்
ஆசை புதைக்கிறாய்
அதை என்னை காணும் போது
என் மேல் பொழிய விடுகிறாய்
விடியலற்ற பூமியோன்றில்
வாழ்ந்திருந்தவன் உன்
விடிந்து விட்ட வானம்
கண்டு பரவயாகிறேன்
பாலைவனம் வாழ்வதற்கு
பழகிவிட்ட நான் உன்
பார்வை பட்டு
வாழ்வதற்காய்
காத்திருக்கிறேன்.
சிநேகம் கொண்டு எனதுயிரை
உருகவைக்கிறாய் அதில்
உனது வாழ்வை தினமும்
மெல்ல கரைய விடுகிறாய்.
Saturday, January 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment